தேனியில் கூட்டம் கூட்டமாக சுற்றிவரும் யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான தோண்டிமலை, புலிப்பாறை, மூலத்துறை, பெரியகானல், சின்னகானல் எஸ்டேட், மூணாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக யானைகள் சுற்றிவருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் யானைகள் இடம்பெயர்ந்து மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால், தேயிலை மற்றும் ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சமாக இருப்பதாக இந்தபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சில நாட்களுக்கு முன், யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.