அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் வளர்த்த காளைக்காக பரிசுகளை அள்ளினார்.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் 549 காளைகளும் 1050 காளையர்களும் பங்கேறனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி . இவர் சிறு வயது முதல் தனது வீட்டில் காளைகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சீறிபாய்ந்தது. இதனை அடுத்து மாட்டின் உரிமையாளரான ரேணுகாதேவிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜல்லிகட்டை நேரில் ரசித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் ரேணுகாதேவிக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.