தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்

தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்
தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்
Published on

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மழை, வெள்ளத்தின்போதும் வெள்ளத்திற்கு பிறகு பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார ஆலோசனைகள் குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என்றும் தொற்றுநோய் வராமல் தடுக்க, சோப்பு பயன்படுத்தி கைகளை அடிக்கடி நீரில் கழுவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் மழையில் நனைந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏ‌ற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல், குடிநீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபின் குடிநீரை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கழிவறை வசதிகளை பயன்படுத்தவும், குப்பை மற்றும் அழுகிய பொருட்கள் தேங்காமல் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

குப்பை கொட்டும் இடங்களில் பிளிச்சீங் பவுடர் மற்றும் சுண்ணாம்பை கொண்டு கிருமிகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் வீடுகளில் மழைநீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இறந்துபோன விலங்குகள், பறவைகளை காண நேர்ந்தால் உடனடியாக மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சி/ ஊராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com