பினாமி கணக்கில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அரசியல்வாதி

பினாமி கணக்கில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அரசியல்வாதி
பினாமி கணக்கில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அரசியல்வாதி
Published on

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பினாமி கணக்கில் ரூ.246 கோடியை ஒரே தவணையாக டெபாசிட் செய்ததை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அந்த சமயத்தில் வங்கி பணி நேரம் முடிந்த பிறகு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள வங்கியில், அரசியல்வாதி ஒருவர் தனது பினாமி கணக்கில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து அந்த நபருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாகவும், பிறகு அவர் பிரதமரின் கரீப் கல்யான் யோஜ்னா திட்டத்தின் கீழ் வரி மற்றும் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் பணமதிப்பு நீக்கத்தின்போது 441 வங்கி கணக்குகளில், சுமார் ரூ.240 கோடி டெபாசிட் செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com