சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொல்வது போல... நோ பார்க்கிங்கில் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு ’G.O.A.T’ படம் பார்க்கச்சென்ற ரசிகர்களுக்கு போலிஸ்காரர்கள் வைத்த செக்... என்னவென்று பார்க்கலாம்.
புது திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே... எத்தனை ரூபாய் கொடுத்தும் டிக்கெட்டை வாங்கி படம் பார்க்க விரும்புவார்கள். ஆனால், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கொடுக்க தயங்கி சாலை ஓரம் மற்றும் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தம் செய்வார்கள்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. இதைக்கருத்தில் கொண்டுதான் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்படும் வாகனத்திற்கு போலிசார் அபராதம் விதிக்கின்றனர்.
இன்றும் அதேபோல் விஜய் நடித்த ’G.O.A.T’ படம் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலையானது 1000 ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதன்படி குரோம்பேட்டை பகுதியில் உள்ள திரையரங்கில் ’G.O.A.T’ படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தங்களின் வாகனத்தை நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். இதை கவனித்த போலிசார், தனது கடமையை செவ்வனே செய்தனர். இதன் வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.