தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் ! மோசடி கும்பலை கைது செய்தது போலீஸ்
வாணியம்பாடி அருகே தொழில்அதிபரை நிர்வாணபடுத்தி பெண்ணுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் பறித்த இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை கே.எம். நகர் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ரப் ஆரிஃப். இவர் தோல் மற்றும் காலனி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு நிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயாரை கவனித்துக்கொள்ள செவிலியர் வேண்டும் என்று பலரிடம் கூறி வந்தார். இதை அறிந்த வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த அபிதா என்ற பெண் கடந்த ஐந்து நாட்களாக இவரை செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், நேரில் வந்து அழைத்து செல்லுமாறு பேசி உள்ளார்.
இந்தச் சுழலில் இவர் கடந்த 16 ஆம்தேதி பெங்களூருக்கு சென்று மாலை ரயிலில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது அந்த பெண் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செவிலியரை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். இதனால் அவர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ மூலம் அவர் வீடிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்ற ஒரு அறையில் அமர வைத்துள்ளார். பின் சிறிது நேரத்தில் திடீர்ரென 5க்கும் மேற்பட்டோர் முகமூடி அணிந்து வந்த கும்பல் அறையில் நுழைந்து கத்தி மற்றும் ஆயதங்களை காண்பித்து அவருடைய ஆடைகள் கழுற்றி அரை நிர்வாணமாக்கி அவருக்கு அருகில் ஒரு பெண்ணை நிறுத்தி செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
மேலும் எடுக்கப்பட்டுள்ள படத்தை காண்பித்து பணம் கேட்டு மிரட்டியும், பணம் கொடுக்காவிட்டால் சமுக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர்.அப்போது அவர் உயிர்க்கு பயந்து தன்னிடம் இருந்த ரூ. 4 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த 5 வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகளை பறித்து அதன் ரகசிய என்னை கத்தியை காட்டி மிரட்டி வங்கியுள்ளனர். பின்னர் அவரை அபிதாவின் வீட்டில் உள்ள ஒரு அறையில் பூட்டி சென்றனர். பின்னர் ஏ.டி.எம் கார்டுகளை எடுத்து சென்ற கும்பல் வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்சத்துக்கான நகைகளை வங்கியுள்ளனர். மேலும் வங்கி ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி ரூ ஒரு லட்சத்தை எடுத்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அறையில் பூட்டி இருந்த தொழில் அதிபரை இரவு 10 மணிக்கு அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்திற்கு தொழிலதிபரை கொண்டு சென்று விடுவதற்காக வந்துள்ளான். அப்போது காதர்பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ வந்த போது தொழிலதிபர் திடீரென கூச்சலிட்டுள்ளார்.இதனை கேட்ட அப்பகுதி மக்கள் ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் ஆட்டோவில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அங்கு தொழிலதிபர் ஆரிப் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோவில் இருந்த ஒருவரை கைது செய்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ் உத்தரவின் பேரில் வாணியம்பாடி டி.எஸ்.பி முரளி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான ஒரு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் நாகூரில் மறைந்திருந்த ஜெயலாபுத்தின் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி சேர்ந்த ஆபிதா, தாரா, கோவிந்தராஜ், சதாம், சாது, அஸ்லம், நதீம், மனோஜ் குமார், அசேன் ஆகிய 10 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர்.