“இடம் பிடிக்க செருப்பு; ரூ.500 கடனுக்கு ரூ.50 வட்டி” - மது குடிப்பவர்களின் அலப்பறைகள்

“இடம் பிடிக்க செருப்பு; ரூ.500 கடனுக்கு ரூ.50 வட்டி” - மது குடிப்பவர்களின் அலப்பறைகள்
“இடம் பிடிக்க செருப்பு; ரூ.500 கடனுக்கு ரூ.50 வட்டி” - மது குடிப்பவர்களின் அலப்பறைகள்
Published on

திருச்சி அருகே குடிக்க பணம் இல்லாததால் மதுகுடிப்பவர் ஒருவர் ரூ. 50 வட்டி தருவதாக கூறி ரூ.500 கடனாக வாங்கிக் கொண்டு டாஸ்மாக் சென்றுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 150 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டன. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் வரதராஜ் செய்திருந்தார். காலை 8 மணிக்கு திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியிலுள்ள மதுபானக் கடைக்கு மது அருந்துபவர்கள் வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியான தனி மனித இடைவெளி வட்டத்தில் காலணிகள், ஹெல்மெட்,குடை வைத்து இடம் பிடித்தனர் .

காலை 11 மணி வரை 70 பேருக்கு மட்டுமே மதுபானம் வாங்க டோக்கன் கொடுக்கப்பட்டது. மதுபான கடைகளில் கிருமி நாசினிகளை மதுபானம் வாங்க வருபவர்கள் பயன்படுத்திய பிறகே மது பாட்டில்களை வாங்க அனுமதித்தனர். அதேபோல் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டது.

கடைக்கு முன்னதாக 5 பேர் மட்டுமே தனிமனித இடத்தில் நிற்கும் அளவிற்கு விரிவான ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இதனிடையே புத்தூர் நால் ரோடு பகுதியில் மதுபானம் வாங்க வந்த அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மது அருந்துவதற்கு ஒரு வாரத்திற்கு 50 ரூபாய் வட்டி தருவதாக கூறி 500 ரூபாய் கடனாக வாங்கி வந்து மதுபானம் வாங்கினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு வேலை இல்லை. ஆகவே கடன் வாங்கி மது அருந்த வந்திருப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com