திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புகள் கடந்து வந்த பாதை.....

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புகள் கடந்து வந்த பாதை.....
திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புகள் கடந்து வந்த பாதை.....
Published on

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் ரத்து அறிவிப்பு வரை நடந்தவற்றை திரும்பிப்பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி, காலித் தொகுதியானது. இதைத்தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததால் அதுவும் காலித்தொகுதிகளாக ஆகின. அத்துடன் அதிமுக எல்.எல்.ஏ ஏ.கே. போஸின் மரணத்தால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்தது. இதனால் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கபட்டது.

ஆனால், 2018ஆம் ஆண்டின் முடிவில் தமிழகத்தில் முக்கிய அறிவிப்பாக வெளியானது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல். இந்த அறிவிப்பு வெளியானதுமே, அதிமுகவின் தொகுதிகளான 19 இடங்களுக்கு இடைத்தேர்தலை அறிவிக்காமால், திமுகவின் ஒரு தொகுதியான திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விகள் எழும்பின.

31.12.2018 - திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு.

31.12.2018 - ஜனவரி 28 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு.

1.1.2019 - திமுக வேட்பாளருக்கான விருப்ப மனுத்தாக்கல் தொடங்கியது.

2.1.2019 - அதிமுக வேட்பாளருக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

2.1.2019 - திருவாரூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிப்பு

3. 1. 2019 - திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.

3.1. 2019 - திருவாரூர் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்.

4.1. 2019 - திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு.

4.1.2019 - அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் அறிவிப்பு.

4.1.2019 - இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் டி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு.

4.1.2019 - தலைமைத்தேர்தல் ஆணையரை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி. டி.ராஜா நேரில் வலியுறுத்தல்.

4.1.2019 - திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தலாமா ? வேண்டாமா ? என்பது பற்றி தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம்     அறிக்கை கேட்டது.

5.1.2019 - மாலைக்குள் அறிக்கை தர மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு.

5. 1. 2019 - மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான நிர்மல்ராஜ் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துகளை கேட்டார்.

5.1.2019 - கட்சிகளின் கருத்தை அறிக்கையாக தயாரித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பினார்.

5.1.2019 - தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

7.1.2019 - திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com