தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவோர் எண்ணிக்கை சரிவு

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவோர் எண்ணிக்கை சரிவு
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவோர் எண்ணிக்கை சரிவு
Published on

தமிழகத்தில் கடுமையான தேர்வின் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை 26 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஓட்டுநர் உரிமம்(லைசென்ஸ்) உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெறுவோர் எண்ணிக்கை 26 சதவிகிதம் சரிவு அடைந்துள்ளதாக மாநில போக்குவரத்து துறை புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணமாக கடுமையான தேர்வு முறை தான் என கூறப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் பெற்றவர்கள் எண்ணிக்கை 26 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.மாநில போக்குவரத்து துறையின் புள்ளிவிவரப்படி, 2017-18ஆம் ஆண்டில் 30 லட்சமாக இருந்த உரிமம், 2018-19ல் 26 சதவிகித சரிந்து 22 லட்சமாகக் குறைந்துள்ளது. இதற்கு காரணம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமத்துக்கான தேர்வு முறை கடுமையாக்கப்பட்டது தான் எனக் கூறப்படுகிறது. 

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை ஒருங்கிணைத்து, தேர்வுகளை சாதாரண மைதானத்தில் நடத்தாமல், அதற்கென அமைக்கப்பட்டுள்ள சாய்தளத்தில் நடத்தப்படுவதும் பலர் தேர்ச்சி பெறாததற்கு இதற்கு காரணமாக கூறப்படுகிறது.அதனால் தான் ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்தவர்களில் ஐந்தில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின் கீழ் இது போன்ற கடுமையான தேர்வு முறை பின்பற்றப்படுவதால் உரிமம் பெறுவோர் எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதாகவும் மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com