தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒருபகுதி இடிந்து தண்ணீரில் விழுந்தது.
தஞ்சை விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் வகையில் மூன்று பிரிவாக பிரித்து கடந்த நான்கு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இரண்டாவது பிரிவில் கட்டப்பட்டு வரும் 34 ஆற்றுப் பாலங்களில் தஞ்சை அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பாலம் 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
புhல வேலைகள் 70 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், பாலத்தை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக கொள்ளிடம் நடுவே கட்டப்பட்ட தூண்கள் மீது ராட்சத கிரேன் மூலம் பாலத்தின் மையப்பகுதியை தூக்கி வைக்கும் பணி நடைபெற்றது.
நுள்ளிரவில் வெளிமாநில தொழிலாளர்கள் 15 பேர் பாலத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்தின் ஹைட்ராலிக் ப்ரஷர் முறையாக வேலை செய்யாததால் ஒருபுறம் கீழே சாய்ந்து பாலத்தின் அப்பகுதி அப்படியே கீழே விழுந்தது.
ஆதனைப் பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக தண்ணீரில் குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.