மழை நீடிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழை நீடிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மழை நீடிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவிற்கு மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் அவ்வப்போது லேசான மழை பெய்கிறது. வெப்பச்சலனத்தால் வடமாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. ‌

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய‌ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை‌பெய்யலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதேவேளையில் 34 முதல் 28 வரை டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com