வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் இயக்குனர் கர்ண பிரியா தெரிவித்துள்ளார். கொரானா தொற்று கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மூலம் விலங்குகளுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறைக்கு கர்ண பிரியா தெரிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்கா தற்போது தொற்று பரவல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.