(கோப்பு புகைப்படம்)
தலையில் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). இவர் மேட்ரிமோனி மூலமாக பெண் தேடி வந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் வரதட்சணையாக 50 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு ராஜசேகரன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், ராஜசேகரன் தலையில் இருந்த விக் கழன்று விழுந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து ராஜசேகரன் மேட்ரிமோனியில் விக் வைத்த புகைப்படத்தை பதிவிட்டு ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.
இது மட்டுமன்றி பெண் வீட்டார் சார்பில் இருந்து கொடுக்கப்பட்ட 50 சவரன் நகைகளை செலவு செய்துவிட்டு, வங்கியில் இருப்பதாக கூறியதும் தெரியவந்தது. இதனையடுத்து தலையில் முடி இருப்பதுபோல் விக் வைத்து கொண்டு மேட்ரிமோனியில் புகைப்படத்தை பதிவிட்டு ராஜசேகர் ஏமாற்றியது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இந்நிலையில் இவையனைத்தும் அனைவருக்கும் தெரியவந்தவுடன், அவர் அவரது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து அந்த இளம்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று 498(ஏ)- கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள், 406- நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் ராஜசேகர், தாயார், ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் யாரையும் கைது செய்து செய்யவில்லை.