தமிழக கேரள எல்லையில் கோயில் திருவிழாவுக்கு கொண்டு வரப்பட்ட யானை மிரண்டதால் பலமணி நேரம் யானை மீது இருந்து கீழே இறங்க முடியாமல் பாகன் தவித்தார்.
குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான காரக்கோணம் அருகில் உள்ள முரியத்தோட்டம் ஸ்ரீ கண்ட சாஸ்தா ஆலய திருவிழாவுக்காக கொல்லம் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவன் என்ற யானை நேற்றிரவு கோயில் திருவிழா முடிந்து யானையின் பாகன்கள் யானையை ஆலய வளாகத்தில் இருந்து வெளியே கொண்டு சென்றார்.
அப்போது திடீரென யானை பாகன் சொல்வதை கேட்காமல் சாலையிலேயே நின்றது. இதையடுத்து யானையை மூன்று பாகன்களும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், முடியாத நிலையில் வெள்ளறடை காவல் துறையினர் மற்றும் கேரள வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 7மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானையை அந்த பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தமிழக கேரள எல்லை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.