வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டும் எண்ணப்படும் என உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேலும் ஒரு தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு எண்ணப்படும் என உச்சநீதிமன்ற தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தெரிவித்துள்ள வழிகாட்டுதலில், பல குறைபாடுகள் இருப்பதாகவும், ஒப்புகை சீட்டை எப்படி எண்ணுவது என்பதற்கு விதிகள் எதும் இல்லை என்றும், ஒப்புகை சீட்டை எண்ணும்போது மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையுடன் வேறுபாடு இருந்தால், அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்றும் கூறி சென்னையை சேர்ந்த லக்ஷ்மிகிருபா என்பவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
மேலும் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டும் எண்ணப்பட்ட பின் முரண்பாடுகள் ஏற்படும் மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் லக்ஷ்மிகிருபா வழக்கறிஞர் ஸ்வரூப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது நீதிபதிகள் டீக்காராமன்,ஆதிகேசவலு அமவில் வந்த போது, தேர்தல் முடிந்தவுடனோ அல்லது விடுமுறை காலத்தின் முதல் இரண்டு அமர்வுகளையோ அணுகாமல், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி முறையீட்டை ஏற்க மறுக்க மறுத்துவிட்டனர்.