ஹெல்மெட் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

ஹெல்மெட் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
ஹெல்மெட் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
Published on

கட்டாய ஹெல்மெட் விதிகளை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இரு நபர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிகள், முழுமையாக அமல்படுத்தவில்லை என பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.அந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விசாரணையில், ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்,இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த பைக் பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் உயிர் இழந்துள்ளதாகவும், அதிலும் வாகனத்தை ஓட்டியவர் ஹெல்மேட் அணியவில்லை என்பதை சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக் பந்தயத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் விதிகளை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, சென்னை போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடுத்த விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com