“சமஸ்கிருத உறுதிமொழியை திணிக்க ஒரு கூட்டம் முயற்சி” - மா.சுப்பிரமணியம்

“சமஸ்கிருத உறுதிமொழியை திணிக்க ஒரு கூட்டம் முயற்சி” - மா.சுப்பிரமணியம்
“சமஸ்கிருத உறுதிமொழியை திணிக்க ஒரு கூட்டம் முயற்சி” - மா.சுப்பிரமணியம்
Published on

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல், மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

தீர்மானத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, ”மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதுபோல ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியிலும் நடைபெற்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் காலங்காலமாக ஏற்கப்படும் உறுதி மொழியே மேற்கொள்வதை அரசு உறுதி செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதேபோல, பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, ”இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பதற்கு அரசு உத்திரவாதம் அளிக்கவேண்டும்” என்றார். இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,


“ஹிப்போகிராட்டிக் உறுதி மொழிதான் பொதுவாக உலகம் முழுவதும் எடுக்கும் உறுதிமொழியாக உள்ளது. சமஸ்கிருத உறுதிமொழியை எடுத்தால் வரும் காலத்தில் சமஸ்கிருதத்தில் எடுக்கும் சூழல் வந்துவிடும். அதோடு, மொழி திணிப்பாக மாறும் நிலை ஏற்படும். தமிழகத்தில் புதிய நடைமுறையாக இது மாறிவிடக்கூடாது. இளம் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதி மொழிதான் ஹிப்போகிராட்டிக் உறுதி மொழி. சமஸ்கிருத உறுதிமொழியில் மன்னர்கள் வெறுக்கப்படுபவர்களுக்கும் மக்களால் வெறுக்கப்படுபவர்களுக்கும் மருத்துவம் பார்க்கமாட்டேன் என்று இருக்கிறது. இந்த உறுதி மொழியை எப்படி எடுக்க முடிக்க முடியும்?. ஒரு கூட்டம் இந்த உறுதிமொழியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com