மதுரை | கணக்கின்றி வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்.. புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்

விவசாயத்துக்காக குறிப்பிட்ட இடங்களில் வண்டல் மண்ணை அள்ளிக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், வணிக நோக்கத்துடன், கணக்கின்றி வண்டி வண்டியாக வண்டல் மண் அள்ளப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்
வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்pt desk
Published on

செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ்

நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்ன?

மதுரை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 787 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் முற்றிலும் இல்லாத காலங்களில் மண் எடுக்க வேண்டும். ஒரே இடத்தில் அள்ளாமல் பரவலாக மண் எடுக்க வேண்டும். மண்ணை வெட்டி எடுக்கும் பொழுது தரையின் மட்டம் கண்மாயில் உள்ள மடையின் அடி மட்டத்திற்கு கீழ் சென்றுவிடக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்
வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்pt desk

நீர்நிலைகைளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது:

வாகனங்கள் செல்லுவதற்காக கரையை வெட்டக்கூடாது. அனுமதி வழங்கப்பட்ட கண்மாயில் உதவி பொறியாளரால் அடையாளம் காட்டப்பட்ட பகுதியில் மட்டுமே மண் எடுக்கப்பட வேண்டும். வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக மண், வெட்டி எடுக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களின் முன்னிலை தான் மண் எடுக்க வேண்டுமென பல நிபந்தனைகள் உள்ளன.

வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்
கவரைப்பேட்டை ரயில் விபத்து | தக்கநேரத்தில் உதவி செய்து பெரும் உயிரிழப்பை தடுத்த கிராம மக்கள்!

அத்துமீறி கண்மாய்களில் அதிக ஆழத்திற்கு வெட்டி எடுக்கப்படும் வண்டல் மண்:

வண்டல் மண்ணை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சூழலில் இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்மாய் மண்ணை கொள்ளை அடிப்பதால், கண்மாய் அருகே உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடிநீர் குறைந்து வருவதாக கூறுகிறார்கள். விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று வண்டல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்தார். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விவசாயிகள் அல்லாத சிலர் அத்துமீறி கண்மாய்களில் வண்டல் மண்ணை அதிக ஆழத்திற்கு வெட்டி எடுத்து வருகிறார்கள்.

வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்
வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்pt desk

புதிய தலைமுறை கள ஆய்வில் வெளியாக அதிர்ச்சி தகவல்:

இந்த குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு உண்மை என அறிவதற்கு களத்தில் இறங்கியது புதிய தலைமுறை. கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஏரிகளில் மண்ணை அள்ளி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கு காலி மனைகளில் குவித்து வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் மண்ணை அள்ளிக் கொண்டிருந்த வியாபாரிகளிடம் ரியல் எஸ்டேட் செய்யக்கூடிய நிலத்துக்கு மண் கொட்டி சமன் செய்ய வேண்டும். ஒரு லோடு மண் எவ்வளவு என்று கேட்டதற்கு, 4 ஆயிரத்து 800 ரூபாய் வரும் என அவர் தெரிவித்தார். மேலும் அரசு அனுமதியை மற்றொருவர் பெயரில் தான் போலியாக போட்டுக் கொண்டு வர வேண்டும் என உண்மைகளை உடைத்தார். அவரது பேச்சு ரகசியமாக காட்சிப்படுத்தப்பட்டது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது புதிய தலைமுறை...

வண்டி வண்டியாக அள்ளப்பட்ட வண்டல் மண்
பெரம்பலூர் | குப்பையோடு குப்பையாக கிடந்த தங்க செயின் - உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்!

அளவுக்கு அதிகமாக கண்மாயில் இருந்து மண்ணை அள்ளிச் சென்றால் அனுமதி ரத்து:

கண்மாயில் வண்டல் மண் அள்ள விவசாயிக்கு டிராக்டர் ஒன்றுக்கு ஒரு யூனிட் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களின் விபரங்களை எங்களிடம் தந்து அதற்கு உரிய அனுமதியை கனிமவளத்துறை மூலம் பெறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், விவசாயிகள் என்ற போர்வையில் அளவுக்கு அதிகமாக கண்மாயில் மண்ணை டிராக்டர்களில் அள்ளிச் சென்றால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், காவல்துறை குற்ற வழக்காக பதிவு செய்யும் என்றும் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com