சொந்தமாக கார் வைத்திருப்போர் இனி 2 லட்சத்துக்குப் பதிலாக 15 லட்சத்துக்கு கட்டாய தனி நபர் விபத்துக் காப்பீடு எடுக்க வேண்டுமென காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் சொந்தகார் வைத்திருப்போர் இனி 750 ரூபாய் வரை ஆண்டுக்கு கூடுதலாக காப்பீட்டுக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்புபடி வாகனத்துக்கு சொந்தக்காரம் வாகனம் ஓட்டினாலும், வாகனத்தில் உடன் இருந்தாலும் அவருக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கால காப்பீடு வழங்குவது குறித்து, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also -> போலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்!
இது குறித்து பேசிய பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவன தலைவர் “இன்னும் பலர் உரிய விபத்துக் காப்பீடு இல்லாமல் பயணிக்கும் சூழலே உள்ளது, இந்த அறிவிப்பு மிகுந்த பயன் தரக் கூடிய ஒன்று, பலரும் காப்பீடு செய்ய முன்வருவார்கள் , அதே நேரத்தில் பிரீமியம் மற்ற விஷயங்கள் குறித்து சில ஆலோசனைகள் தேவைப்படலாம்” என்றார்.