கோவை: கொரோனாவை ஒழிக்க ’கொரோனா’ தேவி சிலை நிறுவி வழிபாடு

கோவை: கொரோனாவை ஒழிக்க ’கொரோனா’ தேவி சிலை நிறுவி வழிபாடு
கோவை: கொரோனாவை ஒழிக்க ’கொரோனா’ தேவி சிலை நிறுவி வழிபாடு
Published on

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மடத்திற்குள் கொரோனாவை ஒழிக்க ‘கொரோனா தேவி’ எனும் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறறது. 

இது குறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறும் போது, “ 400 ஆண்டுக்கு முன்பு அம்மை, காலரா போன்ற நோய்கள் ஏற்பட்ட போது கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் உருவாக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அவை பிற்காலத்தில் வேப்பிலை கும்பங்களும் நடுகற்களும் வைக்கப்பட்டு கோயிலாக மாறியது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கும் நிலையில் ‘கொரோனா தேவி’ என்ற கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகாயாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாகத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதில் ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

பழமை வாய்ந்த கிராமங்களில் இன்று மாரியம்மன் மாகாளியம்மன் வழிபாடு இருப்பது போல, தற்போது ‘கொரோனா தேவி’ வழிபாடும் அவசியமாகிறது. ஆதினத்தின் மூலம் செயல்படும் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பாக கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள், மதிய உணவு ஆகியன தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com