குமரி மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து இயற்கையை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தேனிக்கள் பிரமாண்டமாக கூடு கட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று தொட்டிப்பாலம். குமரி மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்த தொட்டிபப்பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் ஆகும். இந்த தொட்டிபாலத்தை பார்வையிட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையை என்பதால் சுற்றுலா பயணிகள் தினமும் அதிகமாக வருகை தருகின்றனர்.
இந்த சூழலில் இந்த தொட்டிப்பாலத்தின் அடிப்பகுதியில் பிரமாண்டமான தேன் கூட்டை தேனிகள் உருவாக்கி உள்ளது. இந்த தேன் கூடானது தொட்டிப்பாலத்தின் நீரை கொண்டு செல்ல கட்டப்பட்ட காங்கிரேட் கால்வாயின் அடிப்பகுதியில் உள்ளது. இந்த காங்கிரேட் கால்வாயின் மேல்பகுதி வழியாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று இயர்க்கை அழகை ரசிப்பார்கள். அப்போது இந்த தேன் கூட்டில் இருக்கும் லட்ச்சக்கணக்கான தேனிக்கள் சுற்றுலா பயணிகளை கொட்டுகிறது. இதனால் பெரும் சிறமத்திற்கு ஆளாகின்றனர்.
மிக உயரமான இந்த தொட்டிப்பாலத்ததில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளை தேனிக்கள் தாக்கி, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சுற்றுலா பயணிகளுக்கு மிக பெரிய ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு இந்த தேன் கூட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.