செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை

செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை
செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை
Published on

தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரதுறை ஊழியர்கள் நலச்சங்க செயலர் கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆட்சேபனை தெரிவித்து மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நாளை செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கவிருக்கிறது. மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் தரப்பில் அதற்கான அறிவிப்பாணை ஜனவரி 7 ல் வெளியிடப்பட்டுள்ளது. 11 ஆம் தேதி இடமாறுதல் கலந்தாய்வு நடக்கவுள்ளது என 7 ஆம் தேதிதான் அறிவித்தனர். இதனால் சேவை சான்றிதழ் பெறமுடியாமல் செவிலியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. 

மேலும் எந்தெந்த இடங்களில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளது உள்ளிட்ட விபரங்கள் எதுவும் துறை தொடர்பான இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இடமாறுதல் கலந்தாய்விற்கான அறிவிப்பாணை அவசர கதியில் வெளியிடபட்டுள்ளது. செவிலியர் கலந்தாய்வு குறித்து 2007 ல் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால் தற்போது வெளியிட்ட அறிவிப்பாணையில் 2007 ல் வெளியிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று இந்த மனு நீதிபதி சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 11 ஆம் தேதி இடமாறுதல் கலந்தாய்வு நடக்க இருப்பதாக பல செவிலியர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதனால் இடமாறுதல் கலந்தாய்வில் பணம் கொடுத்து இடமாறுதல் பெற வாய்ப்புள்ளதால், அது முறையாக நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து நாளை நடைபெறவிருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு  இடைக்கால தடைவித்து  நீதிபதி உத்தரவிட்டார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com