“வாரிசு அரசியலையே பெரும்பாலான கட்சிகள் ஊக்குவிக்கின்றன” - நீதிபதிகள் வேதனை

“வாரிசு அரசியலையே பெரும்பாலான கட்சிகள் ஊக்குவிக்கின்றன” - நீதிபதிகள் வேதனை
“வாரிசு அரசியலையே பெரும்பாலான கட்சிகள் ஊக்குவிக்கின்றன” - நீதிபதிகள் வேதனை
Published on

பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதா‌க உயர்நீதி‌மன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதி‌மன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், வேட்புமனு தாக்கலில் வேட்பாளர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் கடன் விபரங்கள், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்‌து. அந்த மனு மீது கடந்த முறை விசாரணை நடந்தபோது, திமுக, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சியைத் தவிர பிற கட்சிக வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், நீதிமன்றம் நோட்டீஸை பெற்றனர். பின்னர் பதிலளிக்காத 9 கட்சிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துக் கட்சிகளின் வழக்கறிஞர்களும் ஆஜராகி, அபராதம் குறித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரினர். அதற்கு நீதிபதிகள் மறுத்தனர். அபராதம் விதிப்பது கட்சியைப் பாதிக்கும் என‌க் கட்சிகளின் வழக்கறிஞர்கள் கூறினர். அவ்வாறெனில் அதை நன்கொடையாக செலுத்துங்கள் என நீதிபதி‌ள் உத்தரவிட்டனர். மேலும் அபராதம் விதித்ததை திரும்பப் பெற நீதிபதி‌கள் மறுத்துவிட்டனர்.‌ 

இதைத்தொடர்ந்து, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர், வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், இது போன்று நீதிபதிகள் தெரிவிப்பது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் இது ஜனநாயக நாடு, தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா, யார் வேண்டுமானாலும் பேச உரிமை உண்டு எனத் தெரிவித்தனர். 

இதையடுத்து முன்பு பாராளுமன்றத்திற்கு சென்ற செழியன், மோகன் குமாரமங்கலம், சிதம்பரம், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டோர் மிகுந்த ஆங்கில புலமை கொண்டிருந்தனர். அவர்களைப் போன்ற ஆங்கில அறிவு தேர்தலில் போட்டியிடுவோருக்கு அவசியமானது எனத் தெரிவித்தனர். 

அத்துடன் இந்த வழக்கு தற்போதைய தேர்தலுக்கு தொடர்பில்லாதது என்பதால் இங்கு விசாரிக்கப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஏப்ரல் 22ஆம் தேதியன்று அனைத்து கட்சிகளின் வாதத்தையும் முழுமையாக கேட்பதாக கூறி, வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com