ஏப்ரல் 30-ஆம் தேதியன்று 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் இவ்வாண்டு ஹஜ் பயணத்திற்கு தகுதியற்றவராவர் என்று இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு விடுத்திருக்கும் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண் பயணிக்கு வழித்துணையாக விண்ணப்பித்த 65 வயதைக் கடந்த ஆண்களும் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹஜ் கடமைகளை நிறைவேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவச் சான்று உடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ”தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்”-சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்