மேட்டுப்பாளையத்தில் 35 வயதுடைய யானை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ‘பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ எனும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் சைபால் தஸ்குப்தா அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
முதன்மை வன கண்காணிப்பாளர் தலைமையில் குழு ஒன்று அமைத்திருப்பதாகவும், அந்த குழு ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க இருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
யானைகளின் வாழ்வியலை பாதுகாக்கும் "Project Elephant" திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்றும் நவம்பர் 20க்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.