மருத்துவ ஆய்வுக்கு உடலை தானம் செய்த பள்ளி ஆசிரியை

மருத்துவ ஆய்வுக்கு உடலை தானம் செய்த பள்ளி ஆசிரியை
மருத்துவ ஆய்வுக்கு உடலை தானம் செய்த பள்ளி ஆசிரியை
Published on

செந்துறையில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் ராதா. இவரது மனைவி கமலம், கடந்த 1983-ம் ஆண்டு செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு பதிவியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அன்று முதல் கடந்த 2016 ஆண்டு வரை அதே பள்ளியில் மாணவர்களுக்காக தனது கடமையை முழுமையாக செய்து வந்தார். 

மேலும் இவரிடம் படித்த மாணவர்கள் பலரும் அரசுப் பணியிலும், தனியார் நிறுவன வேலையிலும், அரசியல் பிரமுகர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இந்நிலையில்,கடந்த 2016-ம் ஆண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக தனது வேலையிலிருந்து விரும்ப ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். 

இந்தச் சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி கமலம் உயிரிழந்தார். இவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த போதே, தனது உடலை இறந்த பின்பு மருத்துவ மாணவர்கள் படிப்புக்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு தானமாக எழுதிவைத்திருந்தார். 

இதனால் திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து செந்துறை வந்த மருத்துவக் குழுவினர் கமலத்தின் உடலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவர்களுக்காக தனது வாழ்நாளை ஆசிரியையாக  கழித்து வந்த கமலம், தான் இறந்த பிறகும், தனது உடல் மருத்துவ மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தானம் செய்தது  அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமலம்-ராதா தம்பதியினருக்கு சக்தி,சீனு என்ற 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com