தமிழகத்தை சேர்ந்த ஆயுர்வேத பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கி பெருமைபடுத்திய துபாய்

தமிழகத்தை சேர்ந்த ஆயுர்வேத பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கி பெருமைபடுத்திய துபாய்
தமிழகத்தை சேர்ந்த ஆயுர்வேத பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கி பெருமைபடுத்திய துபாய்
Published on

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு முதன் முதலாக கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் பிறந்த டாக்டர் நஸ்ரின் பேகம், கடந்த 2008 ஆம் ஆண்டு திருச்சி சங்கரா ஆயுர்வேதிக் கல்லூரியில் படித்து மருத்துவராகியுள்ளார். இதையடுத்து மருத்துவ பணிக்காக 2013-ல் துபாய் சென்றார். 2017 ஆண்டு முதல் (MOH) மருத்துவ உரிமம் பெற்றார். இந்நிலையில், சபீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக துபாயில் ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக பணியாற்றி வருகிறார்.

துபாயில் 20 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும்தான் கோல்டன் ஸ்டார் விசா வழங்குவார்கள். ஆனால், முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேதிக் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது பெருமைபட வேண்டிய ஒன்று.

சிறிய நாடான துபாய், தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள் மற்றும் பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கௌரவ விசாக்களை வழங்குகிறது. அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகையை கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த விசாவை பெற்றவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் விசாவை புதுப்பித்தால் போதுமானது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள். தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை கௌரவிக்கவும் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும் தொழிலறிவு படைத்த மக்களை ஊக்கப்படுத்தவும் இத்தகைய நடைமுறையை அமீரக அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை, தன்னுடைய பெற்றோர் சையது பஃதா, நசிமா பேகம் இருவருக்கும் சமர்ப்பிப்பதாக நஸ்ரின் நெகிழ்வுடன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com