கிணற்றில் விழுந்து தவித்த நல்ல பாம்பு: பத்திரமாக மீட்டு வனத்தில் விட்ட தீயணைப்புத் துறை

கிணற்றில் விழுந்து தவித்த நல்ல பாம்பு: பத்திரமாக மீட்டு வனத்தில் விட்ட தீயணைப்புத் துறை

கிணற்றில் விழுந்து தவித்த நல்ல பாம்பு: பத்திரமாக மீட்டு வனத்தில் விட்ட தீயணைப்புத் துறை
Published on

கிணற்றில் விழுந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர், அதனை வனப்பகுதிக்குள் விட்டனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது.

இதைக் கண்ட முனிசாமி பாம்பு தானாக வெளியேறி விடும் என்று நினைத்திருந்தார். ஆனால், இன்று காலை கிணற்றுக்குள் பார்த்தபோது அந்த பாம்பு உயிருடன் இருப்பதைக் கண்டு அருகிலுள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இருந்த நல்ல பாம்பை உயிருடன் மீட்டு அதை வனத்துறையினர் மூலமாக மேகமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com