கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள்? - செல்போன் செயலியை அறிமுகப்படுத்திய சென்னை போலீசார்

கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள்? - செல்போன் செயலியை அறிமுகப்படுத்திய சென்னை போலீசார்
கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள்? - செல்போன் செயலியை அறிமுகப்படுத்திய சென்னை போலீசார்
Published on

சென்னையில் கேட்பாரற்று நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து தகவல் அளிக்க, செல்போன் செயலி ஒன்றை சென்னை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.

சென்னையின் பல்வேறு சாலைகளில் யாரும் உரிமை கோராமல் கேட்பாரற்று நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து தகவல் அளிக்க, பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகின்றன.

இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பினை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.

மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்த தகவலை GCTP Citizen Services என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பதிவேற்றம் செய்யப்படும் தகவலின் அடிப்படையில் அந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்‌கப்பட்டுள்ளது. போலீசாரில் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com