தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், 25-ஆவது நாளில்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இத்தனை காலம் இடைவெளி இந்தமுறைதானா, கடந்த காலங்களில் எப்படி இருந்தது? - ஒரு பார்வை...
வழக்கமாக மேற்குவங்கத்தேர்தலின் கடைசி கட்டத் தேர்தலோடு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்தமுறை அதில் மாற்றம் செய்யப்பட்டதுதான் நீண்ட இடைவெளிக்கு காரணமாகிவிட்டது.
பிளஸ் டூ பொதுத்தேர்வுகள், தமிழ்ப் புத்தாண்டு, கோடைக்காலம் போன்ற காரணங்களால் ஏப்ரல் 6 ஆம்தேதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 மாநிலங்களில் நடத்தும் தேர்தலில் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே வெளியானால் அது மற்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்ற காரணமும் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, தேர்தலுக்கான பாதுகாப்பில் ஈடுபடும் துணை ராணுவப்படையினர் பயன்பாடும் இந்த இடைவெளிக்கான காரணமாக கூறப்படுகிறது.