சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாக்குமரியில் நேற்று இரவு புத்தாண்டினை வரவேற்பதற்காக திருவேணி சங்கமப்பகுதியில் தமிழகம், கேரளா, வடமாநிலம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்த மக்கள் பல்வேறு கொண்டாட்டங்களால் புத்தாண்டினை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு 6.40 மணி அளவில் உதயமாகும் முதல் சூரிய உதயத்தினை காண்பதற்காக ஏரளானமான மக்கள் திருவேணி சங்கமம் பகுதியில் குவிந்தனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிக பனி மூட்டத்தின் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு பின்புறம் உதயமான சூரிய உதயத்தினை பார்க்க முடியவில்லை.
மேலும் இப்பகுதியில் புத்தாண்டை கொண்டாட வந்த சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது சபரிமலை மகரவிளக்கு திருவிழாவிற்காக வந்த ஐயப்ப பக்தர்களும் குவிந்த வண்ணம் காணப்படுகின்ற நிலையில் சூரிய உதயத்தினை காண முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தினை அளித்திருப்பதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.