'உங்களுக்கு விவசாயம் தெரியல' - புகார் அளித்த விவசாயிகளை ஏளனமாக பேசிய அதிகாரி

'உங்களுக்கு விவசாயம் தெரியல' - புகார் அளித்த விவசாயிகளை ஏளனமாக பேசிய அதிகாரி
'உங்களுக்கு விவசாயம் தெரியல' - புகார் அளித்த விவசாயிகளை ஏளனமாக பேசிய அதிகாரி
Published on

சீர்காழி அருகே அரசு விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், இதுகுறித்து புகார் அளித்ததற்காக விவாசாயம் செய்ய தெரியவில்லை என்றும் தண்ணீர் சரியில்லை என்றும் அலட்சியமாக வேளாண்துறை அதிகாரி பேசியது அவர்களை வேதனை அடைய செய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எருமல், தொக்கலாக்குடி, சேமங்கலம், கீழையூர், புதுபட்டினம் உள்ளிட்ட கிராமங்கனை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக செம்பனார் கோவில் வேளான்மை துறை அலுவலகத்தில் கோ-51 ரக விதை நெல் வாங்கியுள்ளனர். கடும் வறட்சியாலும், ஆறு குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் மோட்டாரை கொண்டு தண்ணீர் பாய்ச்சி நிலத்தை செம்மை படுத்தி ஆட்களை கொண்டு விதைகளை விதைத்துள்ளனர்.

அதன் பின்னர் வழக்கம் போல் நெல் வளர்வதற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து பராமரித்து வந்துள்ளனர். ஆனால் ஒரு வாரம் ஆகியும் நெல் முளைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்துசெம்பனார் கோவில் வேளாண்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த களப்பணியாளர் விதைகள் முளைப்புதிறன் இல்லை என்பதை ஒப்புக்கொண்டதுடன் மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதாக கூறிசென்றுள்ளார். அதன் பின்னர் எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கபட்ட விவசாயிகள் தலைமை செயலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த செம்பனார் கோவில் வேளாண் அலுவலர் குமரன் பாதிக்கபட்ட விவசாயிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு விவசாயம் செய்ய தெரியல்லை என்றும் தண்ணீர் சரியில்லை என்றும்  விவசாயிகளை தரகுறைவாக பேசி மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விதை நெல் மூட்டைகளில் கல்லும் மண்ணுமாக இருந்ததை புகைபடம் எடுத்து காட்டிய போதும் அதை விவசாயிகளே கலந்து வைத்து நாடகம் ஆடுவதாக வேளாண் அலுவலர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது “ தனியார் விதைகளில் மோசடிகள் அதிகரித்து வருவதால் அரசு விதையை நம்பி வாங்கினோம். ஆனால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து கடன்காரர்களாக நிற்கிறோம். அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் நாங்கள் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும். ஆகவே தரமில்லாத விதையை விற்பனை செய்த வேளாண்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு , அரசு எங்களுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும்.

விவசாயிகளின் புகார் குறித்து செம்பனார்கோவில் வேளாண்மைதுறை அலுவலர் குமரனிடம் கேட்டபோது ” இதுவரை 70 டன் விதை நெல் விற்பனை செய்யபட்டுள்ளது. எங்களிடம் பற்றாக்குறை ஏற்பட்டபோது வேறு அலுவலகத்தில் இருந்து வாங்கி தரப்பப்பட்ட விதைகளில் பழுது ஏற்பட்டுள்ளது. அந்த சீரியல் எண் கொண்ட விதைகளை பயன்படுத்த வேண்டாம் என அறுவுறுத்தியதுடன் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு புதிய விதைகள் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு புதிய விதைகள் வழங்கபடும் என உறுதியளித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com