மது குடிக்கச் சென்றதால் பால் லாரியை காட்டில் விட்டுவிட்டு வந்ததை மறந்த டிரைவர் சம்பவம் ஊத்தங்கரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த தண்ணீர் பந்தல் வனப்பகுதியில் நேற்று மதியம் 3 மணிக்கு பால் லாரியை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் சென்ற டிரைவர் இரவு மூன்று மணியாகியும் லாரியை எடுக்க வரவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த காவலர்கள் லாரியை ஊத்தங்கரை காவல்நிலையம் கொண்டு வந்தனர். வனப்பகுதியை ஒட்டி நிறுத்தியதால் பதற்றமான காவல்துறையினர் லாரி ஓட்டுனரை யாரேனும் அடுத்து விட்டனரா, கடத்தி விட்டார்களா அல்லது வேறு ஏதேனும் கொலையா என்ற கோணங்களில் விசாரணை செய்தனர்.
ஆனால், விசாரணை அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. விசாரணையில் ஊத்தங்கரை அருகே செங்கன் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் அன்பழகன் லாரியை விட்டுச் சென்றதும் நண்பர்களுடன் மது அருந்தியதால் மதுபோதையில் மயங்கிய நிலையில் லாரி நிறுத்தியதை மறந்துவிட்டு சென்றதும் அம்பலம் ஆனது. இன்று காலை ஒன்பது மணிக்கு காவலர்கள் டிரைவர் வீட்டுகுச் சென்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் இந்த உண்மைகள் தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் புத்திமதி கூறி லாரியுடன் அனுப்பி வைத்தனர்.