கிருஷ்ணகிரி: சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் - ரூ.10க்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்!

கிருஷ்ணகிரி: சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் - ரூ.10க்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்!
கிருஷ்ணகிரி: சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் - ரூ.10க்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்!
Published on

உடல்நலம் பாதித்த யாரும் பணமில்லை என்பதற்காக மருத்துவம் பார்க்காமல் இருக்கக்கூடாது என்பது தான் இந்த மருத்துவரின் ஒரே சிந்தனை. இந்த ஒரு காரணத்தினாலேயே, அனைவரது மனங்களிலும் இடம்பிடித்து பிரபலமாகிவிட்டார், மருத்துவர் லோகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்த இளம் மருத்துவரான இவர், கடந்த 8 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அதே ஊரில் சொந்தமாக சிறிய மருத்துவமனை ஒன்றை தொடங்கி, வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார், லோகேஷ். 24 மணி நேரமும் இந்த மருத்துவமனைக்கு, நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதைவிட அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்க இம்மருத்துவனையை விரிவுபடுத்த வேண்டும் என்பது லோகேஷின் விருப்பமாகும். தனியார் மருத்துவமனையில் டோக்கன் போடுவதற்குக்கூட குறைந்தபட்சம் 20 ரூபாயாவது கட்டணம் வசூலிக்கும் காலமிது. ஆனால், சிறிய தொகைக்கு வைத்தியம் பார்க்கும் லோகேஷின் மனது பெரியது என அவரைக் கொண்டாடுகின்றனர், வேப்பனஹள்ளி பகுதி மக்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com