எங்கெல்லாம் அனுமதி இல்லை, எதற்கெல்லாம் கட்டுப்பாடு - புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டுதல்கள்!

எங்கெல்லாம் அனுமதி இல்லை, எதற்கெல்லாம் கட்டுப்பாடு - புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டுதல்கள்!
எங்கெல்லாம் அனுமதி இல்லை, எதற்கெல்லாம் கட்டுப்பாடு - புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டுதல்கள்!
Published on

புத்தாண்டு கொண்டாட்டத்தை எந்தவித அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகள் இன்றி கொண்டாடுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன அந்தந்த மாநகராட்சியின் காவல்துறையினர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக கோவில் செல்லுதல், கேக் வெட்டி கொண்டாடுதல், இருசக்கர வாகனங்களில் கொண்டாட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் என வாழ்த்துக்களை பகிர்ந்து மக்கள் புது வருட பிறப்பை கொண்டாடுவது வழக்கம். அப்படி கொண்டாடும் போது விபத்துகள், அசம்பாவிதங்கள் போன்ற தவறான நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த மாநகராட்சி காவல்துறையினர் வழிகாட்டு நெறிமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை:

புத்தாண்டில் பைக்ரேசில் ஈடுபவர்களை கண்காணிக்க தனிப்படைகள், வழிபாட்டுத்தலங்களில் குழப்பம் விளைவிக்க முயல்வோர் கைது செய்யப்படுவர் என புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மதுரை மாநகர காவல்துறை.

புத்தாண்டு தினத்தையொட்டி 31ஆம் தேதி இரவு பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட மதுரை மாநகர காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, 31ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், வீடுகளிலேயே புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

*நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. 1300 காவல்துறையினர் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட உள்ளது.

*இரவு பொதுமக்கள் யாரும் தேவையின்றி மோட்டார் வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்கவும், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

*அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள். வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும்.

*கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வோர் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

*பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கபடும். மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது காவல்துறை. மேலும் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள், நாளை மாலை முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

*வேகமாக வாகனங்களை இயக்குபவர்கள், மது அருந்தி வாகனங்களை ஓட்டுபவர்கள், சாகச பயணம் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

*குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிரான குழந்தைகள் மற்றும் சட்ட விதி மீறல் குறித்து பொதுமக்கள் 9655220100 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரண டவுன் பஜார் வீதிகளில் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலைகளை ஆக்கிரமித்த சாலையோர கடைகளை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

பஜாஜ் வீதிகளில் உள்ள கடைகளில் இருக்கும் பொருள்களை கடைகளின் முன்பாக தரையில் வைத்து விற்பனை செய்தும், தங்களுடைய இருசக்கர வாகனங்களை கடைகளில் முன்பாக நிறுத்தியும் ஆக மொத்தம் 10 அடி தூரத்திற்கு குறைவில்லாமல் சாலைகளை ஆக்கிரமித்து வருவதால், பஜார் வீதிகளில் அன்றாடம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்லும் பாதசாரிகள் உள்பட இரு சக்கர வாகன ஓட்டிகள் பஜார் வீதிகளில் பயணிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக, மேலும் பண்டிகை கால திருவிழாக்கள் வருவதையொட்டி சாலை ஓர ஆக்கியிருப்பு கடைகளுக்கு அபராதம் அளித்து, ஆக்கிரமித்த சாலையோர கடைகளை முற்றிலுமாக அகற்றிய போக்குவரத்து போலீசாரை பொது மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com