சென்னை கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மாணவர்களுக்கு வீடு தேடி வரும் ஹால் டிக்கெட் 

சென்னை கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மாணவர்களுக்கு வீடு தேடி வரும் ஹால் டிக்கெட் 
சென்னை கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மாணவர்களுக்கு வீடு தேடி வரும் ஹால் டிக்கெட் 
Published on
 
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடு தேடி வரும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 
 
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடைபெற்று வந்த பொதுத் தேர்வுகள் கொரோனா பரவலால் தடைப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி 11-ஆம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள தேர்வும், 18 ஆம் தேதி 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வும் நடைபெற உள்ளது. இதனிடையே, வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. 
 
 
இதனிடையே இன்று முதல் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
 
 
இந்நிலையில் சென்னையில் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடு தேடி வரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளியூரிலிருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சென்னை மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com