முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு: நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக சிறைத்துறை டிஜிபி

முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு: நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக சிறைத்துறை டிஜிபி
முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு: நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக சிறைத்துறை டிஜிபி
Published on

தமிழகத்தில் 100 முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வுக்காக சிறைத்துறை நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை களிலேயே பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யவும் சிறைத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

இவ்வாறு வாழ்க்கையில் வழிதவறி பல்வேறு குற்றங்கள் செய்தவர்களை திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முயற்சிகளை சிறைத்துறையுடன் சேர்ந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தமிழக சிறைகளில் இருந்து தண்டனைகள் முடிந்து தொழில்பயிற்சி முடித்து வெளியான முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலசங்கம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

அந்த அடிப்படையில் சிறையில் இருக்கும்போது தையல் பயிற்சி மேற்கொண்ட சிறைக்கைதிகளுக்கு தொழில் அமைத்துக் கொடுக்கும் வகையில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் தையல் மிஷின்கள் 10 முன்னாள் கைதிகளுக்கு வழங்கியுள்ளனர். இந்த தையல் இயந்திரங்களை சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் மூலம் வழங்கியுள்ளனர்.

மேலும் கடந்த ஆறு மாதங்களாக சுமார் 38.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆட்டோ ரிக்ஷாக்கள், பசுமாடுகள் வெல்டிங் கருவிகள், கார்பென்டர் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை முன்னாள் கைதிகள் 90 பேருக்கு சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்டனைகள் முடிந்து வெளிவரும் முன்னாள் கைதிகள் மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கும் வகையிலும் ,வாழ்க்கையில் மேம்படும் வகையிலும் இந்த தொழில் உதவிகளை சிறைத் துறை சார்பில் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com