இறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..!

இறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..!
இறந்தவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவலநிலை..!
Published on

திருநெல்வேலி- தூத்துக்குடி நாற்கர சாலையில் அணுகுசாலை இல்லாததால் இறந்தவரது உடலை ஆபத்தான நிலையில் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் அவலநிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


திருநெல்வேலி - தூத்துக்குடி நாற்கரசாலை கடந்த 2010 ஆம் ஆண்டு போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி செல்லும் சாலையில் வல்லநாடு பகுதியில் பக்கபட்டி கிராமத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையாக (NH7A) மாற்றி அமைக்கப்பட்டது. 

தாமிரபரணி  ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கபட்டி கிராம எல்லையில் சுடுகாடு உள்ளது. இங்குதான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15-க்கும் 
மேற்பட்ட  கிராமங்களுக்கு சுடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் இந்த நாற்கரசாலை  அமைக்கபட்டதால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு விட்டது. முறையான பாதை இல்லாததால் உயர்ந்த சாலையிலிருந்து இறந்தவரின் உடலை தலைகீழாக கீழே  இறக்கும் நிலையே இன்று வரை நீடிக்கிறது.  

மேலிருந்து கீழாக இறந்தவரின் உடலை கொண்டு செல்லுபோது பலமுறை விபத்தும் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட இறந்தவரது உடலை இறக்கும் போது கீழே உருண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் வாகனத்தில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை நாற்கர சாலையிலேயே நிறுத்தும் நிலையால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சுடுகாட்டுக்கு பாதை கேட்டு ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும்  மனு கொடுத்தும் இதுவரை பலனில்லை என்கின்றனர் ஊர்மக்கள். ஆபத்தான இறுதிபயணத்தை மனதில் வைத்து மாவட்ட நிர்வாகம் சரியான தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com