ஆழிக்குழிக்குள் விழுந்தக் குட்டியானை உயிரிழப்பு

ஆழிக்குழிக்குள் விழுந்தக் குட்டியானை உயிரிழப்பு
ஆழிக்குழிக்குள் விழுந்தக் குட்டியானை உயிரிழப்பு
Published on

ஓசூர் அருகே ஆழிக்குழியில் விழுந்த குட்டியானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு சுற்றி வருகின்றன. இந்தக் காட்டுயானைகளில் அதிக அளவில் குட்டிகளும் உள்ளன. நேற்று இரவு இந்தக் காட்டு யானைகள் கூட்டம் சென்னமாளம் என்ற இடத்தில் உள்ள யானைகள் தாண்டா அகழி ஓரத்தில் உணவைத் தேடி இடம்பெயர்ந்து வந்துள்ளது.

அப்போது திடீரென கூட்டத்திலிருந்த ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று அகழி குழிக்குள் தவறி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து காலையில் அந்தப் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையின் உடலைமீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் குட்டியானையின் உடலை அடக்கம் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். காட்டுயானை இறப்பு குறித்து தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com