தமிழ்நாடு: அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்; எவையெல்லாம் இயங்கும்?

தமிழ்நாடு: அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்; எவையெல்லாம் இயங்கும்?
தமிழ்நாடு: அமலுக்கு வந்த கூடுதல் தளர்வுகள்; எவையெல்லாம் இயங்கும்?
Published on

தமிழ்நாட்டில் ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 27 மாவட்டங்களில் 9,333 அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வகை 3ல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் இடையே 47 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. மொத்தம் 9 ஆயிரத்து 333 அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வகை 3ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே, திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை. இம்மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடனும் இயங்கலாம் என அரசு கூறியுள்ளது.

அரசு பூங்காக்கள், விளையாட்டு திடல்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்பொருட்கள், கல்வி புத்தகங்கள், பாத்திர கடைகள், பேன்ஸி, செல்போன் கடைகள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வகை 1- மாவட்டங்கள் (11)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை 2- மாவட்டங்கள் (23)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3- (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com