”எடப்பாடி பழனிசாமி நினைத்தால் ஐந்து நிமிடத்தில் அதிமுகவுக்கு விடிவு காலம் பிறக்கும்” - புகழேந்தி

”அதிமுகவை ஒருங்கிணைப்பது எடப்பாடி பழனிசாமி கைகளில் தான் உள்ளது. எங்களது பழைய நண்பர் எடப்பாடி, எங்களை சந்தித்து பேசுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என புகழேந்தி தெரிவித்தார்.
புகழேந்தி
புகழேந்திpt desk
Published on

செய்தியாளர்: சந்தானகுமார்

அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மற்றும் முன்னாள் எம்பி கேசி.பழனிசாமி உள்ளிட்ட அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினர், சென்னை காமராஜர் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்கு இருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கேசி.பழனிசாமி....

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி PT WEB

”நாங்கள் ஒரு சிலரை மட்டும் ஒருங்கிணைக்க இந்த ஒருங்கிணைப்புக் குழுவை தொடங்கவில்லை, கிளை கழகம் முதல் தலைமை வரை ஒருங்கிணைக்க உள்ளோம். கிளை கழக அளவில் நிறைய நிர்வாகிகள் பிரிந்து இருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றியை பெற வேண்டும். முதலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச இருக்கிறோம். அதன் பிறகு மற்றவர்களை சந்திக்க உள்ளோம். எங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுக்க இருக்கிறோம். இதற்காக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என்று கேசி.பழனிசாமி தெரிவித்தார்.

புகழேந்தி
3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி! பிரமாண்ட ஏற்பாடு.. யாருக்கெல்லாம் அழைப்பு தெரியுமா?

அவரைத் தொடர்ந்து பேசிய புகழேந்தி, “அதிமுகவை ஒருங்கிணைப்பது எடப்பாடி பழனிசாமி கைகளில் தான் உள்ளது. எங்களது பழைய நண்பர் எடப்பாடி பழனிசாமி, எங்களை சந்திக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. டிடிவி தினகரன் கட்சியை விட்டு விட்டு அதிமுகவுக்கு வரவேண்டும் என்றால் வரட்டும், எங்களை பொறுத்தவரை பழனிசாமி ஐந்து நிமிடத்தில் முடிவு எடுத்தால் அதிமுகவுக்கு விடிவு காலம் பிறக்கும்.

ttv, sasikala, Ops
ttv, sasikala, Opspt desk
புகழேந்தி
இபிஎஸ் சொல்வதுபோல் வாக்குசதவீதம் அதிமுகவிற்கு அதிகரித்துள்ளதா? தராசு ஷ்யாம் சொல்வதென்ன?

இதற்கு பழனிசாமி ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு தேசிய கட்சி உள்ளே வந்துவிடும். திராவிட சிந்தாத்தம் கொண்ட திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை தொடர்ந்து ஆள வேண்டும் என்ற ஒரு கொள்ளையோடு இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்” என்று புகழேந்தி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com