பெண் காவல் ஆய்வாளர் திட்டியதால் மாணவி தற்கொலை !

பெண் காவல் ஆய்வாளர் திட்டியதால் மாணவி தற்கொலை !
பெண் காவல் ஆய்வாளர் திட்டியதால் மாணவி தற்கொலை !
Published on

ஃபேஸ்புக் மூலமாக கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி ஜோதி நகரில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகள் அபிநயா. இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு முகநூல் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததா‌க தெரிகிறது. அவ்வப்போது இருவரும் தனியாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக பாலன் கூறியதையடுத்து அந்த மாணவி வீட்டை விட்டு சென்றுள்ளார். 

‌இதனையடுத்து மாணவியை கோவைக்கு அழைத்துச் சென்ற பாலன், தங்கும் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு திருமணத்துக்குத் தேவையான சான்றிதழ்களை எடுத்து வரவில்லை எனக்கூறி மாணவியை கோவையில் இருந்து சேலம் அழைத்து வந்த பாலன், அவரை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி அபிநயா, தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து கிருஷ்ணகிரி ‌காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் கிருஷ்ணகிரி காவல்துறையினர் பொள்ளாச்சி காவல் நிலையத்துக்குச் செல்லும்படி கூறியுள்ளனர். 

இதனைதொடர்ந்து மாணவி பொள்ளாச்சி காவல் நிலையத்திற்குச் செல்ல, அவர்கள் கிருஷ்ணகிரிக்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டுள்ளனர். இப்படியே 2 மாதமாக கிருஷ்ணகிரி மற்றும் பொள்ளாச்சி காவல்துறையினர் அலைக்கழித்துள்ளனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முந்தினம் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் போது, பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மாணவியை தகாத வார்த்தையால் அவரையும், அவரது தந்தையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவியை தகாத வார்த்தையால் திட்டிய காவல் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டு பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com