சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியார் நிறுவன காவலாளியாக பணியாற்றி வரும் மயிலாடுதுறையை சேர்ந்த தங்கதுரை தனது ஒரு மாத ஊதியமான 10,101 ரூபாயை கொரோனா தடுப்பு பணிகளுக்கான நிவாரணமாக தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தார்.
தனது ஊதியத்தை நிவாரணமாக வழங்கிய காவலாளியை பாராட்டி முதல்வர் தனது கையொப்பமிட்டு புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார்.
“முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாதச்சம்பளம் ரூ.10,101-ஐ வழங்கிய, சென்னை - சாலிகிராமத்தில் இரவு காவலராக பணியாற்றும், மயிலாடுதுறையை சேர்ந்த திரு. தங்கதுரை அவர்களை பாராட்டிப் புத்தகம் பரிசாக வழங்கி, நன்றி தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்” என திமுக ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.