அதேநேரத்தில், இல்லத்தை கையகப்படுத்தும் முன்பு அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் அப்போதைய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷேசசாயி, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார்.