ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரசு அலட்சியம்: நீதிபதிகள் வருத்தம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரசு அலட்சியம்: நீதிபதிகள் வருத்தம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரசு அலட்சியம்: நீதிபதிகள் வருத்தம்
Published on

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களின் வயதை அறிய மத்திய அரசுக்கும் ஆர்வமில்லை. மாநில அரசுக்கும் ஆர்வமில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ் என்ற முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடம். பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை, ஆதிச்சநல்லூரில் இருந்து 15கி.மீட்டர் தொலைவில் அமைந்திருந்துள்ளது. இங்கு அழகாய்வு பணி 2004ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 

ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும்,வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது மத்திய தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஓய்வு பெற்ற தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு தேவையான வசதிகள் செய்துதரப்பட்டு உள்ளதாகவும், தேவைப்படும் வசதிகளை செய்துதரவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.  அப்போது கார்பன் சோதனைக்கு அனுப்பவது குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அதிக ஆழத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் சோதனைக்கு அனுப்பினாலேயே எவ்வளவு காலம் பழமையானது என்பதை சரியாக வரையறுக்க இயலும் என தெரிவித்தனர். தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களின் வயதை அறிவதில் மத்திய அரசும் ஆர்வம் செலுத்தவில்லை. மாநில அரசும் ஆர்வம் செலுத்தவில்லை என வருத்தம் தெரிவித்தனர். பின்னர் கார்பன் பரிசோதனைக்கு டெல்லிக்கு அனுப்பினாலும்,  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கும் அனுப்பினால் எவ்வளவு காலம் பழமையானது என்பதை வரையறுத்து உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். இவ்வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com