நாட்டில் உள்ள 70 கோடி ஏழைகளை பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை – ப.சிதம்பரம்

நாட்டில் உள்ள 70 கோடி ஏழைகளை பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை – ப.சிதம்பரம்
நாட்டில் உள்ள 70 கோடி ஏழைகளை பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை – ப.சிதம்பரம்
Published on

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற புரளியை கிளப்பியதே பாஜக தான் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

சென்னை தானா தெருவில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் உரையாற்றினார். அப்போது...

பாஜக ஆளுகின்ற வட மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆந்த மாநிலங்களை விட்டு அவர்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது. வட மாநில தொழிலாளர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் செல்ல உரிமை உண்டு அவர்கள் தமிழகத்திற்கும் வர முழு சுதந்திரம் உண்டு.

தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி பாஜக. மக்கள் அந்த கட்சியிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பிரதமரை மதிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அக்கட்சியின் மாநில தலைவரை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்களின் கொள்கைக்கு எதிரான பாஜக-விற்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் இருப்பது வரவேற்கத்தக்கது

இந்திய பொருளாதாரம் 2வது காலாண்டிலும் 3வது காலாண்டிலும் சரிவை சந்தித்து இருக்கிறது. 4வது காலாண்டிலும் பின்னடைவை சந்திக்க உள்ளது. பெருமுதலாளிகளுடன் பாஜக அரசுக்கு உடன்பாடு உள்ளது. பாஜக சில முதலாளிகள் செழித்து வளர உதவுவதற்காக ஆட்சிக்கு வந்த கட்சி. நாட்டில் உள்ள 70 கோடி ஏழைகளை பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை. ஆமையும் ,அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதுபோல பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com