30 நிமிடங்களில் நிறைவுபெற்ற திருச்சி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்

30 நிமிடங்களில் நிறைவுபெற்ற திருச்சி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்
30 நிமிடங்களில் நிறைவுபெற்ற திருச்சி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்
Published on

திருச்சி மாநகராட்சியின் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடர் மேயர் அன்பழகன் தலைமையில் தொடங்கியது. திருச்சி மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார். திருச்சி மாநகராட்சிக்கு வருவாய் நிதி, குடிநீர், மூலதன நிதி உள்ளிட்டவைகள் மூலம் மொத்தம் வரவு 2,14,011.52 ரூபாயாகவும், செலவு 2,13,919.03 ரூபாயாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. உபரி பட்ஜெட்டாக 92 லட்சத்து 49 ஆயிரம் உள்ளதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில்  மிக முக்கியமாக மாநகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம், மேலப்புதூர் நடை மேம்பாலம், சூரிய ஒளி மூலம் மின் சக்தி தயாரித்தல், ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு மேம்படுத்துதல், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சீர்மிகு சாலைகள், நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டும் பணிகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருச்சியில் உள்ள 65 வார்டுகளில் ரூபாய் 32.50 லட்சம் மதிப்பீட்டில் 128 புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நிமிடத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. ஜூன் 6ம் தேதி மீண்டும் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெறும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் அறிவித்ததார்.

இதையும் படிக்கலாம்: உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்" - திருச்சி செயற்குழுவில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்மானம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com