பள்ளத்தில் சிக்கிய சிறுவனை கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்ட தீயணைப்புத் துறையினர்

பள்ளத்தில் சிக்கிய சிறுவனை கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்ட தீயணைப்புத் துறையினர்
பள்ளத்தில் சிக்கிய சிறுவனை கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்ட தீயணைப்புத் துறையினர்
Published on

திருச்சி அருகே ஆறு அடி பள்ளத்தில் விழுந்த சிறுவனை 2 மணி போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில், இன்று காலை 12 வயதான ஆடுமேய்க்கும் சிறுவனான ஆதித்யா வழக்கம் போல் இன்றும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது செல்போன் அங்கிருந்த பாறையின் உள்ளே விழுந்தாகத் தெரிகிறது. அதனை எடுப்பதற்காக ஆதித்யா முயன்றுள்ளான். இந்த முயற்சியின் போது அவன் எதிர்பாராத விதமாக அந்தப் பள்ளத்தில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

வெகுநேரம் ஆகியும் ஆதித்யா காணாத அவனது சக நண்பர்கள் அவனை தேடி உள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்த ஆதித்யா சத்தம் கேட்டு, அவன் ஆறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டதை அவர்கள் அறிந்தனர். உடனடியாக அவர்கள் தாத்தையங்கார் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி ஆதித்யாவை உயிருடன் மீட்டனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com