“நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பாஜக ஒத்துழைக்கும்” - ஸ்டாலினுக்கு எல்.முருகன் வாழ்த்து

“நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பாஜக ஒத்துழைக்கும்” - ஸ்டாலினுக்கு எல்.முருகன் வாழ்த்து
“நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பாஜக ஒத்துழைக்கும்” - ஸ்டாலினுக்கு எல்.முருகன் வாழ்த்து
Published on

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.

அவர்,தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதலமைச்சராக பதவி ஏற்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான ஆதரவை பெற்று திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் உயர்வுக்கு தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக கட்சியின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com