வினையாக இருந்த முன்விரோதம் - பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

வினையாக இருந்த முன்விரோதம் - பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை
வினையாக இருந்த முன்விரோதம் - பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை
Published on

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்த சப்பானி செல்வி தம்பதியரின் மகன் விஜய் (வயது20). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் மீது பல்வேறு வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில், விஜய்க்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்றும் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அங்கு காவல்துறை வரவே அவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் விஜய் வீட்டிற்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் விஜயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இது குறித்து தகவலறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விஜயின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com